பெயின்டர் கொலை வழக்கு வாலிபருக்கு ஆயுள் தண்டனை
Added : அக் 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

கடலுார்:பெயின்டர் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கடலுார் கோர்ட் தீர்ப்பு கூறியது.
கடலுார் மாவட்டம், கடலுார், முதுநகர் ஆலைக் காலனியைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 55; கூலி தொழிலாளி. இதே பகுதியில் வசித்தவர் பாரதிதாசன், 30; பெயின்டர். இவர்கள் இருவருக்கும் இடையில் இடப்பிரச்னை சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. கடந்த 2012ல் பாரதிதாசனின் தம்பி பாண்டியராஜ், அதே பகுதியில் எல்லை மாரியம்மன் கோவிலில் அமர்ந்திருந்தார்.

அங்கு வந்த மணிவண்ணனின் உறவினர்களான ஆலைக் காலனியைச் சேர்ந்த சகோதரர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 33, ஆசை தம்பி, 30, ஆகியோர் பாண்டியராஜை தாக்கினர். தாக்கப்பட்டதை அண்ணன் பாரதிதாசனிடம் பாண்டியராஜ் கூறினார். ஆத்திரமடைந்த பாரதிதாசன் சம்பவ இடத்திற்கு சென்று, நேதாஜி சுபாஷ் சந்திர போஸிடம் நியாயம் கேட்டதால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தன் தரப்பினருடன் சேர்ந்து பாரதிதாசனை கத்தியால் குத்தி கொலை செய்தார்.கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, தொழிலாளிகளான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஆசை தம்பி, மணிவண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.கடலுார் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி சுபா அன்புமணி தீர்ப்பு கூறினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு ஆயுள் தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆசை தம்பிக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மணிவண்ணன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X