திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், மஹாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 12ம் தேதி, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடைபெற உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் இப்போட்டியில், முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு, முறையே 5,000, 3,000 மற்றும் 2,000 ரூபாய் பரிசு; அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு, சிறப்பு பரிசு தலா 2,000 ரூபாய் வழங்கப்படும்.