காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியில் அமைந்துள்ள யாத்திரி நிவாஸ் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு செல்லும் வழியில் மழை நீர் கால்வாய் அமைந்துள்ளது. அந்த கால்வாயில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் மூடி உடைந்து உள்ளே விழுந்து சில இடங்களில் பள்ளம் தெரிந்தது. அந்த இடத்தில் மண்ணை போட்டு நிரப்பியதால் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கால்வாயில் மழை நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயை சீரமைக்க வேண்டும்.