துணை நடிகர்களுக்கு சம்பளம் தராமல் 'டிமிக்கி!' | சிவகங்கை செய்திகள் | Dinamalar
துணை நடிகர்களுக்கு சம்பளம் தராமல் 'டிமிக்கி!'
Added : அக் 02, 2022 | |
Advertisement
 
Latest district News

காரைக்குடி:காரைக்குடி அருகே பள்ளத்துாரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பேரன் அருள்நிதி நடித்த படத்தில் துணை நடிகர்களுக்கு சம்பளம் வழங்காமல் படக்குழுவினர் சென்றதால், துணை நடிகர்கள் படக்குழு வாகனங்களை சிறை பிடித்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பள்ளத்துார் பேரூராட்சியிலுள்ள பங்களா ஒன்றில் அருள்நிதியின் மூர்கன் படப்பிடிப்பு இரண்டு நாட்களாக நடந்தது. இதில் நடிக்க மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த துணை நடிகர்கள் வந்திருந்தனர். நேற்று மாலை பள்ளத்துாரில் சினிமா படப்பிடிப்பு முடிவடைந்தது. துணை நடிகர்களுக்கு சம்பளம் வழங்காமல் படக்குழுவினர் புறப்பட்டுச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த துணை நடிகர்கள் அங்கு நின்ற இரண்டு படக்குழு வாகனங்களை சிறைபிடித்தனர். மேலும், 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் கண்டு கொள்ளவில்லை.இது குறித்து படக்குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டது. துணை நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்க குழுவினர் ஏற்பாடு செய்தனர். சம்பளத்தை பெற்ற பின், துணை நடிகர்கள் கலைந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X