ராமேஸ்வரம்-சென்னை ரயில் 3 மணி நேரம் தாமதம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
ராமேஸ்வரம்-சென்னை ரயில் 3 மணி நேரம் தாமதம்
Added : அக் 02, 2022 | |
Advertisement
 

ராமேஸ்வரம்:-ரயில் பெட்டிகள் பராமரிப்புக்காக ராமேஸ்வரம்- - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் 3:00 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
ராமேஸ்வரம் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பிட்லைன் நடைமேடை பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் புதுப்பிக்கும் பணி துவங்கியது. இதனால் நேற்று காலை சென்னையில் இருந்து ராமேஸ்வரம் வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் பராமரிப்புக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டது.
இதன் காரணமாக நேற்று இரவு 8: 20 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட வேண்டிய சேது எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி 55 நிமிடங்கள் தாமதமாக இரவு 11:15 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த ரயில் தாமதத்தால் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருந்து சென்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X