காட்டு யானைகளை ரசித்த சுற்றுலா பயணிகள் | தேனி செய்திகள் | Dinamalar
காட்டு யானைகளை ரசித்த சுற்றுலா பயணிகள்
Added : அக் 02, 2022 | |
Advertisement
 
Latest district News

மூணாறு:கேரளா மூணாறு அருகே மாட்டுபட்டியில் ஒன்றாக சுற்றித்திரிந்த காட்டு யானைகள் மூன்று குழுக்களாக பிரிந்து வலம் வந்ததை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
மாட்டுபட்டியில் உள்ள மாட்டுப் பண்ணைக்கு அணையின் கரையோரம் 600 ஏக்கரில் புல் வளர்க்கப்படுகிறது. அவை ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் என்பதால் அங்கு வரும் காட்டு யானைகள் தீவனத்திற்காக நாள் கணக்கில் முகாமிடும்.
அங்கு கடந்த இரண்டு மாதங்களாக மூன்று பெண் யானைகள் தனது மூன்று குட்டிகளுடன் முகாமிட்டிருந்தன. குட்டிகள் அவ்வப்போது செய்து வந்த சுட்டித் தனங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.இந்நிலையில் மூன்று யானைகளும் தனது குட்டிகளுடன் தனித்தனியாக பிரிந்து சென்று புல் மேடுகளில் வலம் வந்தன. அவற்றை சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X