சதுரகிரியில் தடை பக்தர்கள் ஏமாற்றம் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
சதுரகிரியில் தடை பக்தர்கள் ஏமாற்றம்
Added : அக் 02, 2022 | |
Advertisement
 

ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரியின் ஒரு பகுதியான மதுரை மாவட்டம் சாப்ட்டூர் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறையில் இருந்து கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா நடக்கிறது. இதற்காக தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் இரவு சதுரகிரியின் ஒரு பகுதியான சாப்டூர் மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
அதிகாலை முதல் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் பக்தர்கள் குவிந்திருந்தனர். ஆனால், தீ விபத்தின் காரணமாக யாரையும் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.பின்னர் வனத்துறை கேட் முன்பு சூடம் ஏற்றி கோயிலை நோக்கி வணங்கி சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X