தேனி அருகே மதரசாவிற்கு 'சீல்' | தேனி செய்திகள் | Dinamalar
தேனி அருகே மதரசாவிற்கு 'சீல்'
Added : அக் 02, 2022 | |
Advertisement
 
Latest district News

தேனி:தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி முத்துதேவன்பட்டியில் உள்ள அறிவகம் எனும் மதரசாவிற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
இப்பேரூராட்சி 6 வது வார்டு முத்துதேவன்பட்டியில் அறிவகம் என்ற பெயரில் இஸ்லாமிய ஆராய்ச்சி மையமும், பலாஹிய்யா எனும் பெயரில் அரபிக் கல்லுாரியும் செயல்பட்டன. இங்கு செப். 22 ல் தேசிய பாதுகாப்பு முகமையின் (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் சோதனை நடத்தினர். லேப்டாப், கல்லுாரி முதல்வரின் அலைபேசி, காவலாளியின் அலைபேசி உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.

இதை தொடர்ந்து செப்.28ல் பி.எப்.ஐ., அமைப்பை மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடை விதித்தது.இந்நிலையில் அறிவகம், ஆராய்ச்சியகம், பி.எப்.ஐ., கீழ் செயல்பட்டு வரும் மதரசாபள்ளியை பூட்டி சீல் வைக்க அரசு உத்தரவிட்டது. அங்கு தங்கியிருந்த மாணவர்களை வெளியேற்றப்பட்டனர். அதன் பின் தேனி தாசில்தார் சரவணபாபு தலைமையில் போலீசார் பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகளின் முன்னிலையில் சீல் வைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X