பின்னலாடை ஏற்றுமதி மேம்பட சபதம்! ஏற்றுமதியாளர் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு
Added : அக் 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



திருப்பூர், அக். 2-

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு மற்றும் நிர்வாக குழு ஆலோசனைக் கூட்டம் ஆகியன நடந்தது. ''திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வளர்ச்சிக்காக உரிய வகையில் பாடுபடுவோம்'' என்று புதிய தலைவர் கே.எம்.சுப்ரமணியன் கூறினார்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க 2022-25ம் ஆண்டு நிர்வாக குழு தேர்தல் நடந்தது. நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவும், தொடர்ந்து எண்ணிக்கையும் நடைபெற்றது.'நிப்ட்- டீ' கல்லுாரி வளாகத்தில் சங்க ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாக குழுவினர் அறிமுகம் செய்யப்பட்டனர்.புதிய தலைவர் கே.எம்.சுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு சங்க நிறுவன தலைவர் சக்திவேல் மற்றும் முந்தைய தலைவர் ராஜா சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.நேற்று அப்பாச்சி நகரில் உள்ள ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். நிறுவன தலைவர் சக்திவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.புதிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைவர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். பொது செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். துணை தலைவர்கள் ராஜ்குமார், இளங்கோவன், இணை செயலாளர்கள் சின்னசாமி, குமார், செயற்குழு உறுப்பினர்கள் டி.இளங்கோ, ஆனந்த், சி.இளங்கோ, பழனிசாமி, திருநாவுக்கரசு, மோகன்குமார், சுந்தர மூர்த்தி, பூபதி, பிரேம் அகர்வால், கிருஷ்ணராஜ், செந்தில்குமார், ரவி, ஹரிபிரகாஷ், லோகநாதன், சுகுமார், யோகபிரகாஷ், ரத்தினசாமி, பிரதீப்குமார், ரவீந்திரநாத், அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.சங்க செயல்பாடு, தொழிற்துறை வளர்ச்சி மற்றும் நகரின் முன்னேற்றம் ஆகியன குறித்து ஆலோசித்தனர்.தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது:பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்த திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம், ஏற்றுமதி அளவு அதிகரிக்கும். ஆண்டு தோறும் 20 சதவீத அளவு ஏற்றுமதி வளர்ச்சிக்கு வழி ஏற்படுத்தப்படும்.பி.எல்.ஐ., (உற்பத்தி சார் ஊக்குவிப்பு சலுகை) திட்டம் 1 நடைமுறையில் உள்ளது. இதன் இரண்டாவது திட்டத்தில் திருப்பூருக்கு உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு சலுகைக்கு முக்கிய பங்களிப்பு பெறப்படும்.திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் வளர்ச்சிக்காக ஏற்றுமதியாளர் சங்கம் உரிய வகையில் பாடுபடும். சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் திருப்பூரில் அமைக்க வேண்டும். பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் 20,000 பேர் தங்கும் வகையிலான விடுதி வசதி ஏற்படுத்த அரசு துறைகளுடன் இணைந்து முயற்சி செய்யப்படும்.சிறு அளவில் நடைபெறும் பின்னலாடை தொழில் பல்வேறு பிரச்னைகளால் முழு அளவில் சில நேரங்களில் வெற்றியடைய முடியாத நிலை உள்ளது. இதற்கான காரணங்களை ஆராய்ந்து அதை சீர் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.ஏற்றுமதியாளர்கள் எந்நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 5 பேர் கொண்ட குழு அமைத்து செயல்படுத்தப்படும்.மத்திய, மாநில அரசுகள் மூலம் தொழில்துறை மேம்பாடுக்கான திட்டங்கள் உரிய வகையில் அதிகளவில் திருப்பூருக்கு பெற முயற்சி செய்யப்படும். திருப்பூரின் போக்குவரத்து வசதிக்காக மெட்ரோ ரயில் திட்டத்தில் திருப்பூரை இணைக்கும் வகையில் உரிய முயற்சி செய்யப்படும்.தொழிலாளர் நலம் காக்கும் வகையில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுமானப் பணிகள் விரைந்து மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கை மேற்ெகாள்ளப்படும். நுால் விலை சற்று குறைந்து வருகிறது. இதனால் பின்னலாடை தொழில் மேம்படும்.ஐ.கே.எப்., நிட் பேர் நடப்பாண்டும் சிறப்பான முறையில் நடத்தப்படும். பல தரப்பினரும் இதனால் பயன் பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X