பல்லாயிரம் ஆண்டு கடந்தாலும் கலாசாரம் மாறாத இந்திய தேசம்! அமெரிக்க தம்பதி புகழாரம்
Added : அக் 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

அமெரிக்காவை சேர்ந்தவர் ஜிம்; இருபது ஆண்டுகள் அங்கு ராணுவத்திலும், பத்து ஆண்டுகள் விலங்கியல் பூங்காவிலும் வார்டனாகவும் பணியாற்றியவர். இவரது மனைவி டெப்ளின் ராணுவ ெஹலிகாப்டர் பைலட்டாக இருந்தார்.இருவரும் ஓய்விற்கு பின், கடந்த, 10 ஆண்டுகளாக, 48 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். பொள்ளாச்சி ஆழியார் அறிவுத்திருக்கோவிலில் யோகா பயிற்சிக்காக, 15 நாள் வந்தவர்கள், பல்லடம் வனாலய செயல் தலைவர் பாலசுப்பிரமணியத்தின் வேண்டுகோளை ஏற்று, திருப்பூருக்கு முதல் முறையாக சமீபத்தில் வருகை தந்தனர்.

இவர்கள் முதலில் சென்றது ஜெய்வாபாய் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு; பள்ளி தலைமையாசிரியர் ஸ்டெல்லா வரவேற்று தமிழக கல்வி முறை பற்றி விவரித்தார்.ெஷரீப் காலனியில் உள்ள கிட்ஸ் கிளப் இன்டர்நேஷனல் பள்ளிக்கு விசிட் செய்தனர். தாளாளர் நிவேதிகா வரவேற்றார்.பள்ளியில் வைக்கப்பட்ட நவராத்திரி கொலுக்கண்காட்சியை பார்த்து ரசித்தனர். அதற்கான விளக்கத்தையும் கேட்டறிந்தனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் கலாசாரம் குறித்த கண்காட்சியை மாணவர்கள் விளக்கினர். மாணவர்களுடன் உரையாடினர்.



மரங்களை பார்த்தால்மனம் இதமாகிறது



தம்பதியினர் பகிர்ந்த சுவாரசிய தகவல்கள்...ஜெய்வாபாய் பள்ளியில் 5 ஆயிரத்து, 500 மாணவிகள் படிப்பது வியப்பாக உள்ளது. பள்ளி மேலாண்மை நன்றாக உள்ளது. இயற்கைக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர். காலியிடங்களில் எல்லாம் மரங்களை பார்க்கவே மனதுக்கு இதமாக உள்ளது.அரசின் மதிய உணவுத்திட்டம், இலவச பஸ் வசதி, இலவச லேப்டாப், சைக்கிள் திட்டம் வழங்குவது மாணவர் நலனில் உள்ள அக்கறையை காட்டுகிறது.அமெரிக்காவில் மாணவர்கள் தான் ஆசிரியர் இருக்கும் வகுப்பறைக்கு செல்ல வேண்டும். அப்போது ஒரே சத்தமாகவும், கூச்சலிட்டபடியும் செல்வர். இங்கு ஆசிரியர்கள் மாணவர்கள் இடத்திற்கு செல்வதை பார்க்கவே நேர்த்தியாக உள்ளது. இந்திய முறை சிறப்பு.தேர்வு நடந்ததால், மாணவிகளுடன் உரையாட முடியவில்லை என்று வருத்தமாக உள்ளது. பள்ளிக்கு தேவையானவை குறித்து கேட்டிருக்கிறோம். அமெரிக்காவில் உள்ள என்.ஜி.ஓ.,க்களிடம் கூறி, இவற்றை பெற்றுத்தர ஏற்பாடு செய்ய உள்ளோம்.



மேற்கத்திய தாக்கம்வேண்டாமே



கொலுக்கண்காட்சி சிறப்பாக உள்ளது. ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவுகளை தினந்தோறும் அனைவருக்கும் பரிமாறுவது சிறப்பாக உள்ளது. கலாசாரம், பாரம்பரியத்தை ஆண்டுதோறும் நினைவுபடுத்துவது மட்டுமின்றி, வருங்கால சந்ததியினரும் அதைத் தொடரச்செய்வதற்கான முயற்சி அற்புதம்.எங்கள் ஊர், 200 வருட சரித்திரம் கொண்டதுதான். இங்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கலாசாரத்தை மாறாமல் காப்பாற்றியுள்ளீர்கள். அதேசமயம், மேற்கத்திய கலாசார தாக்கத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுங்கள்.தயவுசெய்து துரித உணவை குழந்தைகளிடம் காட்டாதீர்கள். இந்த தவறை செய்ததால் அமெரிக்காவில், 30 வயதிற்குள் இருப்பவர்களில், 30 சதவீதம் பேர் நோயாளிகளாக உள்ளனர். காரணம், உணவை பதப்படுத்தியும், திரும்ப திரும்ப சூடு செய்தும் சாப்பிடுவதால்தான், அதிக நோயாளிகள் கொண்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.துரித உணவை குழந்தைகளிடம் காட்டாதீர்கள். இந்த தவறை செய்ததால் அமெரிக்காவில், 30 வயதிற்குள் இருப்பவர்களில், 30 சதவீதம் பேர் நோயாளிகளாக உள்ளனர். காரணம், உணவை பதப்படுத்தியும், திரும்ப திரும்ப சூடு செய்தும் சாப்பிடுவதால்தான், அதிக நோயாளிகள் கொண்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X