லவங்க லதிகா | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
லவங்க லதிகா
Added : அக் 02, 2022 | |
Advertisement
 
Latest district News

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மைதாமாவுடன் டால்டா சேர்த்து ஒன்றாக பிசைந்துக் கொள்ளவும். அதனுடன் வெதுவெதுப்பான தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி மாவு மிருதுவாகும் வரை பிசைந்து 15 நிமிடம் ஊற வைக்கவும். பிசைந்து வைத்திருக்கும் மாவை நீளவாக்கில் தேய்த்து நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.மாவு உருண்டை : உருண்டை ஒன்றை எடுத்து அப்பளம் அளவிற்கு தீட்டவும். அதில் மேல் பக்கத்தையும் கீழ்பக்கத்தையும் ஒன்றன் மேல் ஒன்று வைத்து உள்பக்கமாக மடக்கவும்.மாவு தீட்டுதல் : அதை அப்படியேமற்றொரு பக்கம் திருப்பி வலது பக்கத்தையும் இடது பக்கத்தையும் இணைத்து நடுவில் கிராம்பை குத்திவைக்கவும். இதேப் போல் மற்ற உருண்டைகளிலும் செய்து வைக்கவும்.லதிகா செய்தல் : வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் லவங்க லத்திகாக்களைப் போட்டு சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.லவங்க லத்திகா : மற்றொரு பாத்திரத்தில் சீனியை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். சீனி கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஏலக்காய் எசன்ஸ், கலர் பவுடர் சேர்த்து கலந்து விடவும்.சீனி பாகு : அதில் பொரித்து வைத்திருக்கும் பிஸ்கெட்டுகளை போட்டு மேலே பாகை ஊற்றி சிறிது நேரம் வைக்கவும்.லவங்க லத்திகா : பாகு லத்திகாவுடன் சேர்ந்து நன்கு ஊற வேண்டும். அப்போதுதான் சுவையாக இருக்கும். லவங்க லதிகா தயார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X