'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' நுகர்வோர் கண்காட்சியை...மிஸ் பண்ணிடாதீங்க! ஒரே இடத்தில் விருப்ப தேடல்கள் அனைத்தும்
Added : அக் 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

பொள்ளாச்சி:'அப்பா... ப்ரண்ட்ஸ் எல்லாரும், 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சிக்கு போறாங்க. எங்களுக்கும் ஸ்கூல் லீவு விட்டுட்டாங்க. உங்களுக்கும் இன்னைக்கு ஆபீஸ் லீவு தானே, எல்லோரும் கண்காட்சிக்கு போயி, வீட்டுக்கு தேவையானதையும், எங்களுக்கு தேவையானதையும் வாங்கலாம்,' என, குட்டீஸ், இல்லத்தரசி அன்புடன் அழைப்பது தெரிகிறது. இன்னும் என்ன யோசனை, கண்காட்சி இன்னைக்கு நிறைவடைகிறது, சீக்கரமா கிளம்புங்க!பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து லீவு விட்டுட்டாங்க.



காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜைக்கு தொடர் லீவு விட்டுட்டாங்க. இந்த வேளையில, 'டிவி' முன்னாடி, உட்கார்ந்து, பொழுதை கழிக்காதீங்க. குடும்பத்தோட நேரத்தை செலவிட்டு, வீட்டுக்கு தேவையான பொருட்களை 'பட்ஜெட்' விலையில் மக்கள் வாங்க வேண்டும் என்பதற்காகவே, 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' நுகர்வோர் கண்காட்சி நடக்கிறது.பொள்ளாச்சியில், கோவை ரோட்டிலுள்ள, ஸ்ரீ கந்த மஹாலில், கடந்த, 30ம் தேதி கண்காட்சி துவங்கியது. மூன்று நாள் கண்காட்சி இன்று நிறைவடைகிறது. கண்காட்சிக்கு 'விசிட்' பண்ணுங்க, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிட்டு மகிழ்ச்சியோடு போலாம்!இந்த வீட்டு உபயோகப் பொருட்கள் நுகர்வோர் கண்காட்சியில், சர்வதேச அளவிலான தயாரிப்பு நிறுவனங்கள், இந்தியாவின் பிரபலமான நிறுவனங்கள் சார்பில், நேரடியாக அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.வெளிநாட்டு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள், கைவினைக் கலைஞர்கள் பலரும் கண்காட்சியில் தங்கள் பொருட்களை அதிரடி சலுகை விலைகளில் விற்பனை செய்யவுள்ளனர்.
கண்காட்சியில், 70க்கும் மேற்பட்ட ஸ்டால்களுடன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, எல்லா வயதினரையும் குஷிப்படுத்தும், மேஜிக் ஷோ, ஜக்லர்ஸ் ஷோ, ஒட்டக சவாரி, குட்டீஸ்களை குஷிப்படுத்தும் வாட்டர் போட், பலுான் கேம்ஸ், என, ஏராளமான விளையாட்டுகள், பல விதமான பொழுது போக்கு அம்சங்களும் உள்ளன.உணவுப் பிரியர்களை உற்சாகப்படுத்தும் வகையில், பல்வேறு மாநிலங்களின் ஸ்பெஷல்களை கொண்ட ஸ்டால்களுடன், சைவ, அசைவ உணவுத் திருவிழாவும் இந்த கண்காட்சியில் நடக்கிறது.கண்காட்சியில் 'ஷாப்பிங்' செய்வதுடன், கலகலப்பாக பொழுதையும் கழித்து வரலாம் என்பதற்கு 'கியாரண்டி' அளிக்கும் வகையில், வெகு சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கண்காட்சியில், காலை 10:00 மணியில் இருந்து, இரவு 8:00 மணி வரை, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கணும், குட்டீஸ்களை குஷிபடுத்தணும் என, ஏகப்பட்ட கனவுகளோடு பட்ஜெட் போட்டிருப்பீங்க. உங்க பட்ஜெட் கனவை, இந்த நுகர்வோர் கண்காட்சி நிச்சயம் நனவாக்கும்.பொள்ளாச்சி, உடுமலை மக்களே! இன்னும் என்ன யோசனை, குழந்தைகள், இல்லத்தரசியோடு விடுமுறை நாளை குதுாகலத்துடன் கொண்டாட கிளம்புங்க!



கண்காட்சி இன்று நிறைவு

'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியில், ஏராளமான பொருட்கள் நிரம்பியுள்ளன. கண்காட்சிக்கு ஆர்வத்துடன் வந்த மக்கள், மனநிறைவுடன் பொருட்கள் வாங்கி, மகிழ்ச்சியாக சென்றனர். கண்காட்சி, இன்றுடன் நிறைவு பெறுகிறது.ஸ்கூல் லீவு விட்டுட்டாங்க, குழந்தைகளோடு கண்காட்சிக்கு வந்தால், புது அனுபவம் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களையும் வாங்கி குவிக்கலாம். மனதுக்கு விரும்பியதை ருசித்து, குட்டீஸ்களுடன் நாள் முழுக்க 'பன்' ஆக பொழுதை களித்து, மகிழ்ச்சியாக வீடு திரும்பலாம்.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X