குட்டீஸ்கள் கொண்டாட்டம் குதுாகலத்துக்கு பஞ்சமில்லாத 'கிட்ஸ் ஜோன்'
Added : அக் 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியில், இடம் பெற்றுள்ள 'கிட்ஸ் ஜோன்' குழந்தைகளை பெரிதும் கவர்ந்தது. இந்த ஏரியாவில் இருந்து குழந்தைகளை கிளப்புவது பெற்றோருக்கு கொஞ்சம் சிரமம்தான்.

கண்காட்சியில், 'கிட்ஸ் ஜோன்' பகுதியில், 'வாட்டர் போட், வாட்டர் ரோலர், பன் சிட்டி, பிங்க் ஸ்லைடு, பப்பாயி, ஓசன் பார்க்' ஆகிய விளையாட்டுக்களும், ஒட்டக சவாரியும் இடம் பெற்றுள்ளன.



'வாட்டர் போட்'



புட் கோர்ட்டினுள் 30 அடி நீளம் 15 அடி அகலம் உள்ள தண்ணீர் நிரப்பபட்ட செயற்கை குளத்தில், கையால் இயங்கும் விதமான படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதில், 3 முதல் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் படகில் அமர்ந்து தங்கள் கைகளால் படகை 'பெடல்' செய்து, குளத்தினுள் வலம் வந்து மகிழ்ந்தனர்.சில குழந்தைகள் தங்கள் படகு மீது மற்றொரு படகு மோதவிட்டு, சுட்டித்தனம் செய்து மகிழ்ந்தனர். படகில் அமர்ந்தபடி குழந்தைகள் செய்யும் சேட்டைகள், முகமலர்ச்சியை உறவினர்கள், மொபைல்போனில் போட்டோகளை எடுத்து மகிழ்ந்தனர், வாண்டூஸ்களும் 'போஸ்' கொடுத்தனர்.



'வாட்டர் ரோலர்'



தண்ணீர் ஊற்றப்பட்டு, ஒரு நபர் மட்டும் சென்று வரும் விதமாக, காற்று நிரப்பபட்டிருந்த பலுானில், 4 முதல் 10 வயது வரையிலான குழந்தைகள், ஒருவர் பின் ஒருவராக உள்ளே சென்று, பலுானுக்குள் அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளில், தங்கள் கைகளால் ஏறி, விளையாடி மகிழ்ந்தனர். அதில், விளையாடிய சிறுவர், சிறுமியர்கள் ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு, பலுான் மீது, ஏறி விளையாடிக் கொண்டே, பலுானுக்குள் சுத்திச்சுத்தி வந்தனர்.வெளியில் இருந்து, அதை பார்த்த மற்ற குழந்தைகளையும், வாட்டர் ரோலரில் விளையாட ஆர்வம் காட்டினர்.



'பன் சிட்டி'



வீடுகள், சிறிய நகரம் மற்றும் சறுக்கு விளையாட்டுக்களுடன் ஒரு 'மினி' நகரம் போல் அமைக்கப்பட்டிருந்த இந்த விளையாட்டு, பெற்றோர்களையும் அதில், சென்று விளையாடும் விதமாக ஈர்த்தது.அதில், விளையாடிய சிறுவர்கள், பலுான் மீது அமைக்கப்பட்டிருந்த சறுக்கு படிக்கட்டுகளில் ஏறி, சறுக்கி விளையாடியும், அடுத்தடுத்து தடுப்புகள் போல் அமைக்கப்பட்டிருந்த பலுான்களுக்கு இடையில் உள்ளே நுழைந்து, வெளியே வந்தும், துள்ளிக் குதித்து மகிழ்ந்தனர்.இந்த விளையாட்டு சிறுவர், சிறுமியர்களுக்கு ஒரு சிறுவர்கள் பூங்காவுக்குள் சென்று வந்த அனுபவத்தை கொடுத்தது.



'பிங்க் ஸ்லைடு'



'பிங்க்' நிறத்தில் கண்ணை கவரும் பலுானில், ஒருபுறம் பிளாஸ்டிக் படிக்கட்டுகளில் ஏறி, மறுபுறம் சறுக்குகளில் இறங்கி கீழே வந்து, பிங்க் ஸ்லைடு விளையாட்டில் குட்டீஸ் விளையாடினர். இதனுள், 4 வயது முதல் 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியர்கள் விளையாடி, போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து மகிழ்ந்தனர்.



'பப்பாயி'



35 அடி நீளம் 30 அடி உயரத்தில் இருந்த, மஞ்சள் நிற பலுானில், ஒரே நேரத்தில் இரண்டு பேர் ஒருபுறமிருந்து ஏறி, மறுபுறம் கீழே இறங்கி குதித்து, 'பப்பாயி' விளையாட்டில் மகிழ்ந்தனர். இந்த விளையாட்டில், ஒரே நேரத்தில் இருவர் ஏறி, மேலே சென்று, துள்ளிக் குதித்து கொண்டாடினர். இதேபோல் 'ஓசன் பார்க்' விளையாட்டில், ஒரு சிறிய ரக வளையத்தினுள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சென்று விளையாடி, ஆரவாரம் செய்தனர்.



ஒட்டக சவாரி



பாலைவனத்திலும், புத்தகத்திலும் மட்டுமே ஒட்டகங்களை கண்டிருந்த, குட்டீஸ்களுக்கு நேரில் ஒட்டகத்தை கண்டதும், அளவில்லாத மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல், ஆனந்தத்தில் பூரித்தனர். ஒட்டகத்தில் அமர்ந்து சென்று வந்து, விதவிதமாக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தும் குழந்தைகள் மகிழ்ந்தனர்.வீடு, பள்ளி, என, கடிவாளம் போட்டது போன்று இருந்த குழந்தைகள், கண்காட்சியில் பல வித விளையாட்டுகளில் மூழ்கினர். குழந்தைகளின் முகமலர்ச்சியையும், ஆரவாரத்தையும் கண்டு, பெற்றோர் அகம்மகிழ்ந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X