இயற்கையை காக்க துணிப்பை பயன்படுத்துங்க! வால்பாறையில் பிளாஸ்டிக் தவிர்க்க விழிப்புணர்வு
Added : அக் 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

வால்பாறை:பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறையில், வனவிலங்குகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அக்காமலை கிராஸ்ஹில்ஸ் பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அரசு அறிவித்துள்ளதோடு, தேசிய பூங்காகவும் மாற்றி பாதுகாத்து வருகிறது.இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த அரசு தடைவிதித்தது. ஆரம்பத்தில் வால்பாறை நகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க, அவ்வப்போது கடைகளில் சோதனை நடத்தி ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். கடந்த சில மாதங்களாக மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் இயற்கை ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர். வால்பாறையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில், மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்தும் திட்டம் நகராட்சி சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கமிஷனர் பாலு ஆகியோர் உத்தரவின் பேரில் வால்பாறையில் உள்ள, 21 வார்டுகளிலும் மஞ்சப்பை பயன்படுத்தும் வகையில், துண்டுப்பிரசுரம் வழங்கி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.நகரில் உள்ள கடைகளில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், வியாபாரிகளுக்கு மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.அதிகாரிகள் பேசும்போது, 'ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறையில், பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதால், வனவிலங்குகளுக்கும், இயற்கைக்கும் பெரும் தீங்கு ஏற்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் தவிர்த்து, துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும். வால்பாறையின் இயற்கையை பாதுகாக்க, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்ப்போம், துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்துவோம்,' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X