வழிப்பறி செய்த தந்தை, மகன் கைது: ரூ. 33 லட்சம், 24 சவரன் நகை மீட்பு
Added : அக் 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

திருப்பூர்:தாராபுரத்தில் காரை வழிமறித்து ரியல் எஸ்டேட் வர்த்தகரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில், தந்தை, மகனை போலீசார் கைது செய்து, 33 லட்சம் ரூபாய், 24 சவரன் நகையை மீட்டனர்.சென்னையை சேர்ந்தவர் பாஸ்கரன், 52. ரியல் எஸ்டேட் வர்த்தகர். கடந்த, 29ம் தேதி சென்னையில் இருந்து பொள்ளாச்சிக்கு தனது காரில், 'ஆக்டிங்' டிரைவர் பரத், 22 என்பவருடன் சென்று கொண்டிருந்தார்.


திருப்பூர் மாவட்டம், மூலனுார் அருகே திடீரென டூவீலரில் வந்த, முகமூடி அணிந்த ஒருவர் காரை வழிமறித்தார். அந்த நபர், காரில் இருந்த இருவரையும் தாக்கி, 33 லட்சம் ரூபாய், 24 சவரன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றார். காயமடைந்த, இருவரும் பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.எஸ்.பி., செஷாங் சாய் உத்தரவின்படி, மூலனுார் போலீசார் விசாரித்தனர். இதுதொடர்பாக, டிரைவர் பரத், தந்தை குமார், 47 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'பாஸ்கரன், விவசாய பூமி விற்பனை தொடர்பாக, பொள்ளாச்சிக்கு வந்து சென்றார்.
இது தொடர்பாக, பல இடங்களை குமார் காட்டி வந்தார். மகன் பரத்தை, 'ஆக்டிங்' டிரைவராக அவரிடம் வேலைக்கு சேர்த்து விட்டார். பாஸ்கரனிடம் பணப்புழக்கம் அதிகம் இருப்பது குறித்து, பரத் தனது தந்தையிடம் கூறினார். இருவரும் சேர்ந்து, பணத்தை வழிப்பறி செய்ய திட்டமிட்டனர். சென்னையில் இருந்து பணம், நகையோடு பொள்ளாச்சிக்கு வருவது குறித்து மகன், தந்தைக்கு தகவல் அளித்தார்.சந்தேகம் வராமல் இருக்க முகத்தை துணியால் மூடி காரை வழிமறித்த குமார், இருவரையும் தாக்கி, பணம், நகையை பறித்து சென்றார். பாஸ்கரனுக்கு, பரத் மீது சந்தேகம் ஏற்படவில்லை. விசாரணையில், இது அம்பலமானது. தந்தை, மகன் கைது செய்யப்பட்டு, பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X