ஆண் சிறுத்தை கொலை வழக்கில்ரவீந்திரநாத் எம்.பி., சிக்குகிறார்?
Added : அக் 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

பெரியகுளம்:பெரியகுளம் வடக்குமலை காப்புக்காட்டில் சிறுத்தை கொலையான சம்பவத்தில், ஆட்டுக்கிடை பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டார். நிலத்தின் உரிமையாளர்கள் ரவீந்திரநாத் எம்.பி., உட்பட மூன்று பேரிடம் விசாரிக்க, வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வரட்டாறு வடக்கு மலை காப்புக்காட்டில், தென்கரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் உள்ளது. இங்குள்ள காப்புக்காடு எல்லையில், 'சோலார்' மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.இதில், செப்., 27 காலை பெண் சிறுத்தை உயிருக்கு போராடுவதாக, ரேஞ்சர் செந்தில்குமாருக்கு தகவல் கிடைத்தது. உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன் தலைமையில் வனத்துறையினர் பெண் சிறுத்தையை காப்பாற்றினர்.அப்போது உதவி வனப்பாதுகாவலரை சிறுத்தை தாக்கியது. மறுநாள், 2 வயது ஆண் சிறுத்தை சோலார் மின்வெளி கம்பி வயிற்றுப் பகுதியில் சுற்றி, வாயில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தது. வனத்துறையினர் மேற்பார்வையில் பிரேத பரிசோதனை நடந்தது.சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்தனர். தேனி அருகே பூதிப்புரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், 35, என்பவர் ஆட்டுக்கிடை அமைத்திருந்தார். சில நாட்களாக கிடையில் இரு ஆடுகள் சிறுத்தைக்கு பலியாகின.அதனால், சோலார் மின்வேலியில் சுருக்கு கம்பி அமைத்து சிறுத்தை கொல்லப்பட்டிருக்கலாம் என, வனத்துறையினர் சந்தேகப்பட்டனர். இதன் அடிப்படையில், அலெக்ஸ் பாண்டியன் கைது செய்யப்பட்டார்.தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நீதிபதி லலிதா ராணி, அலெக்ஸ் பாண்டியனை, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.ரேஞ்சர் செந்தில்குமார் கூறுகையில், ''நிலத்தின் உரிமையாளர்கள் ரவீந்திரநாத் எம்.பி., காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோரிடம் விசாரணை செய்யப்பட உள்ளது,'' என்றார்.--


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X