மானாமதுரை மேலப்பசலை அருகே பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு
Added : அக் 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



மானாமதுரை : மானாமதுரை மேலப்பசலை அருகே மிகப் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டு பக்தர்களால் வழிபாடு செய்யப்படுகிறது.இப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மதுரை -ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில் மானாமதுரை மேலப்பசலை அருகே கிழக்கு திசையை நோக்கி மிகப்பெரிய சிவலிங்கம் ஒன்று உள்ளது.அதன் அருகில் கருங்கல் பீடமும் அதில் சிவபெருமானின் வாகனமான காளை உருவமும் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் வளர்ந்திருந்த கருவேல மரங்களை அகற்றிய போது இந்த சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது இந்த வழியாக சென்ற சிவ பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் மாதந்தோறும் பிரதோஷம் மற்றும் விசேஷ நாட்களில் வந்து வழிபாடு செய்கின்றனர்.சிவனடியார்கள் மற்றும் ராஜபாண்டி என்பவர் கூறுகையில்,முந்தைய காலங்களில் பக்தர்கள் காசி மற்றும் ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரையாக செல்லும் போது வழிகளில் சிவ வழிபாடு செய்வதற்காக மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழிநெடுகிலும் ஆங்காங்கே சிறிய அளவிலான சிவன் கோயில்கள் மற்றும் பக்தர்கள் தங்குவதற்காக மடங்கள் சத்திரங்களை அப்போதைய மன்னர்கள் கட்டியுள்ளனர்.

தற்போது கூட மதுரை ராமேஸ்வரம் சாலையில் பீசர்பட்டணம் என்ற இடத்தில் சிவலிங்கத்துடன் மடம் உள்ளது. அதேபோல் இந்த மேலபசலை பகுதியிலும் சிவாலயம் இருந்ததற்கான அடையாளம் உள்ளது, காலமாற்றத்தால் அவை தற்போது இடிந்து மண்ணுக்குள் புதையுண்டு இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. தற்போது இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள லிங்கம் மிக பழமையான லிங்கமாக இருப்பதினால் இப்பகுதியை சுற்றி கோயில்கள் மற்றும் ஏராளமான வரலாற்று சுவடுகள் இருப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளன. ஆகவே தொல்லியல் துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும்,என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X