புதுச்சேரி-புதுச்சேரியில் அம்மா அறக்கட்டளை மற்றும் மகாத்மா காந்தி மருத்துவமனை இணைந்து இலவச மருத்துவ முகாம் நடந்தது.
ஆட்டுப்பட்டியில் உள்ள புனித அந்தோணியர் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளியில் நடந்த முகாமை, அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் துவக்கி வைத்தார்.இதில், பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், கண் மருத்துவம், தோல் சிகிச்சை பிரிவு, இதய நோய், காது, மூக்கு, பல், தொண்டை, எலும்பியல் உட்பட பல நோய்கள் சம்பந்தமாக பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.முகாமில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மருத்துவ சிகிச்சை பெற்ற அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் சர்க்கரை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பிரபாகரன் செய்திருந்தார்.இதில், மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மீனவரணி செயலாளர் ஞானவேல், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை தலைவர் குணாளன், தொகுதி செயலாளர் துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.