மூணாறு : மூணாறு அருகே லாக்காடு எஸ்டேட்டில் அர்ஜூன் என்பவருக்குச் சொந்தமான நான்கு மாத கர்ப்பிணி பசு சிறுத்தையிடம் சிக்கி இறந்தது. செப்.29ல் மேய்ச்சலுக்குச் சென்ற பசு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஆற்றில் பசுவின் உடல் பாதி தின்ற நிலையில் கிடந்தது. அதனை மீட்டு நடத்திய ஆய்வில் சிறுத்தை தாக்கி கொன்றதாக தெரியவந்தது.அப்பகுதியில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் சமீபத்தில் சிறுத்தையை நேரில் பார்த்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் புலி, சிறுத்தை ஆகியவற்றிடம் சிக்கி பத்துக்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்ததால் தொழிலாளர்களிடையே அச்சம் அதிகரித்தது.