அரிச்சுவடி எழுதும் மழலைகளுக்கு புகைப்படத்துடன் கூடிய 'தினமலர்' சான்று! | சென்னை செய்திகள் | Dinamalar
அரிச்சுவடி எழுதும் மழலைகளுக்கு புகைப்படத்துடன் கூடிய 'தினமலர்' சான்று!
Updated : அக் 02, 2022 | Added : அக் 02, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
 

சென்னை: 'தினமலர்' நாளிதழ் வரும் 5ம் தேதி விஜய தசமி தினத்தன்று நடத்தும், 'அ'னா, 'ஆவ'ன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்று, அரிச்சுவடி எழுதும் மழலைகளுக்கு புகைப்படத்துடன் கூடிய சான்று வழங்கப்பட உள்ளது.

'தினமலர்' நாளிதழ் சார்பில், இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்கும், 'அ'னா, 'ஆ'வன்னா' அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி, சென்னையில் வடபழநி, பெரம்பூர், தாம்பரம் ஆகிய இடங்களில், வரும் 5ம் தேதி, விஜயதசமி தினத்தன்று நடக்கிறது.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி எம்.துரைசாமி, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் டாக்டர் காமகோட்டி, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், பின்னணி பாடகி பத்மபூஷன் பி.சுசீலா பங்கேற்று இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை துவக்கி வைக்கின்றனர்.latest tamil newsமேலும், பரதநாட்டிய கலைஞர் ஷீலா உன்னிகிருஷ்ணன், விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன், ஓய்வுபெற்ற டி.ஜி.பி., - எம்.ரவி, நாடக கலைஞர் டி.வி.வரதராஜன், தமிழ் கிராமிய நாட்டுப்புற பாடகர் அனிதா குப்புசாமி மற்றும் கல்வி யாளர்கள் பலரும் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் இரண்டரை வயது முதல் மூன்றரை வயதுள்ள குழந்தைகளை பங்கேற்க வைத்து, அவர்களை கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கலாம். இதில் பங்கேற்க அனுமதி இலவசம்.
முன்பதிவு அவசியம்.எனவே, தங்களின் குழந்தைகளை பங்கேற்க வைக்க விரும்புவோர் குழந்தை பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, மொபைல் போன் விபரங்களை, தாங்கள் பங்கேற்க விரும்பும் பகுதிக்கென குறிப்பிடப்பட்டு உள்ள மொபைல் எண்ணுக்கு, 'வாட்ஸ் அப்' அனுப்பி, முன்பதிவு செய்ய வேண்டும். மழலைகள் அரிச்சுவடி எழுதிய உடனே, புகைப்படத்துடன் கூடிய, 'தினமலர்' நாளிதழின் சான்றிதழ் வழங்கப்படும்.

அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியை 'தினமலர்' நாளிதழுடன் இணைந்து எவர்வின் கல்வி குழுமம், ஆவின் நிறுவனம் நடத்துகின்றன.நிகழ்ச்சி நடக்கும் இடங்கள் / பதிவு செய்ய வேண்டிய மொபைல் எண்
வடபழநி: அருள்மிகு வடபழநி ஆண்டவர் கோவில், வடபழநி, சென்னை - 26 / 99443 09681
பெரம்பூர்: எவர்வின் வித்யாஷ்ரம், 32/ 134 பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர், சென்னை - 12 / 98843 91342
தாம்பரம்: ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி, 539, வேளச்சேரி மெயின் ரோடு, சென்னை - 59/ 97511 36644 .

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X