ராமேஸ்வரம் கோயிலில்1008 விளக்கு பூஜை | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
ராமேஸ்வரம் கோயிலில்1008 விளக்கு பூஜை
Added : அக் 02, 2022 | |
Advertisement
 
Latest district News



ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் உபகோயிலில் நவராத்திரி விழாவையொட்டி 1008 விளக்கு பூஜை நடந்தது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான உஜ்ஜயினி மகாகாளியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடக்கிறது.



இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு உஜ்ஜயினி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை செய்து மகா தீபாராதனை நடந்தது. பின், இக்கோயில் எதிரே உள்ள சன்னதி தெருவில் 1008 விளக்கு பூஜை நடந்தது. இதில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பனை சேர்ந்த ஏராளமான பெண்கள் திருவிளக்குகளுடன் பூஜையில் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X