ரேஞ்சர்: கல்பாதை, வண்டி பாதை அமைப்பதற்கு அனுமதி இல்லை. மற்றபடி நடை பாதையாக பயன்படுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை.
கிருஷ்ணசாமி : பாதை அமையும் நிலம் வருவாய்த்துறை, வனத்துறைக்கு கட்டுப்பட்டதா என்ற குழப்பம் நீடிக்கிறது. இதை சீர் செய்ய வேண்டும்.
தாசில்தார்: சர்வே செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கணேசன், வில்பட்டி: கொடைக்கானல் மாற்று பாதையாக உள்ள வில்பட்டி, பாரதிய அண்ணா நகர் ரோட்டை விரைவில் அமைக்க வேண்டும். இதனால் கொடைக்கானலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும்.
ஆர்.டி.ஓ., : உரிய துறைக்கு இது குறித்து அனுப்பபடும். விஜய ராகவன், மன்னவனுார் : தற்போதுள்ள ஊராட்சித் தலைவர்கள் மக்கள் பணிகளில் ஆர்வம் செலுத்தாமல் கமிஷன் பெறுவதிலேயே ஆர்வம் காட்டிக்கின்றனர். இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள ஊராட்சிகளில் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.டி. ஓ., : சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் வராததால் இதுகுறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கப்படும்.
கிருஷ்ணமூர்த்தி, காமனுார் : கானல்காடு பெரியமலைப் பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அமைத்த வேலிகள் சேதம் அடைந்துள்ளதால் திருட்டுக்கள் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் செய்வது அறியாது தவிக்கிறோம் .
ராம்குமார்(ரேஞ்சர்): யானைகள் விரட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக தனிக்குழு தற்போது திண்டுக்கல் சரகத்தில் இருந்து வர உள்ளனர்.
விவேகானந்தன், மன்னவனுார் : 1984ல் கொடைக்கானல் கோயம்புத்துார் இணைப்பு ரோடு ரூ. ஒரு கோடியே 86 லட்சத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது வரை இப்பணிகள் நடக்கவில்லை. இந்த ரோடு அமையும் பட்சத்தில் கொடைக்கானலில் இருந்து 80 கி.மீ., தொலைவில் கோயம்புத்துாரை அடைய முடியும். அருகில் உள்ள கிராமங்களும் பயனடையும்.
ஆர். டி. ஓ., : சம்பந்தப்பட்ட துறைக்கு அறிக்கை அனுப்பப்படும்.
கிருபாகரன் : விவசாய நிலங்களில் வளர்க்கப்படும் குதிரை, வளர்ப்பு மாடுகள் காட்டு மாடுகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கின்றன . இதற்கு உரிய இழப்பீடு வழங்காமல் வனத்துறை தாமதம் செய்கிறது.
ரேஞ்சர்: சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து அதற்கான இழப்பீடு வழங்கும் பணிகளை செய்து வருகிறோம். துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணமூர்த்தி: தோட்டக்கலைத் துறை திட்டங்கள் கீழ் மலை பகுதியில் விவசாயிகளுக்கு சரிவர தெரியாத நிலையில் சிறு,குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் .
தோட்டக்கலை அலுவலர் : திட்டங்கள் விவசாயிகளை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
கணேசன், கவுஞ்சி : கொடைக்கானல் மேல்மலைக்கு வனப்பகுதியில் மின் வழித்தடங்கள் செல்கின்றன. இயற்கை இடையூறுகளால் மரங்கள் விழுந்து இங்கு உள்ள 20க்கு மேற்பட்ட மலை கிராமங்கள் இருளில் மூழ்கின்றன. பிரச்னையை தீர்க்க உயர் மின் கோபுரங்கள் அமைத்து தர வேண்டும்.
ஆர்.டி.ஓ.,: மின் வாரியத்திற்கு இது தொடர்பாக விளக்கம் கேட்கப்படும்.
அசோகன்: வில்பட்டி ஒராவி அருவிக்கு பாதை ஏற்படுத்தி சுற்றுலா தலம் ஆக்க வேண்டும்.
ஆர்.டி.ஓ., : இது குறித்து பரிசளிக்கப்படும். விஜயராகவன்,கவுஞ்சி: மலைப்பகுதியில் சட்ட விரோதமாக சில்லறை மது விற்பனை நடந்து வருகிறது. டாஸ்மார்க் கடை 12 மணிக்கு திறக்கும் முன் இங்கு நாள் முழுவதும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதால் சமூக சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ஆர்.டி.ஓ.,: எஸ்.பி ., மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
கணேசன் : மேல் மலையில் நீடிக்கும் மின் தடை குறித்து கொடைக்கானல் உதவி செயற்பொறியாளர்களை தொடர்பு கொள்ளும் நிலையில் அவர் மிரட்டல் போக்கில் பேசுகிறார்.
ஆர்.டி.ஓ ., : அவர்கள் எச்சரிக்கப்படுவர்.
ராஜகோபால்: மேல்மலையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தாசில்தார்: இப் பிரச்னையை சீர் செய்ய கொடைக்கானல் மலையில் ஒன்பது இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.