அரசு அலுவலர்கள், பணியாளர்கள்கதர் ஆடை அணியுங்கள்: கலெக்டர்
Added : அக் 03, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கதர் ஆடை அணிய வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நேற்று, காந்தியின் 154வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.காந்தியின் படத்திற்கு மலர் துாவி, மரியாதை செலுத்தி, தீபாவளி சிறப்பு விற்பனையை கலெக்டர் ஷ்ரவன்குமார் துவக்கி வைத்து பேசியதாவது:காந்தியின் சுதந்திர போராட்ட கால சின்னமாக கதர் ஆடை திகழ்கிறது. ஒவ்வொரும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி பிறந்த தினம், மற்றும் தேசிய தலைவர்களின் நினைவு தினங்களில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் என ஒவ்வொருவரும் கதர் ஆடை வாங்கி உடுத்தி, நெசவாளர் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும்.மேலும், மாவட்ட கதர் விற்பனை அங்காடி மூலம் தரமான அசல் கதர் பட்டுப் புடவை, பருத்தி ரகங்கள் மற்றும் கதர் பாலியஸ்டர் ரகங்கள், வேட்டி, துண்டு, ரெடிமேட் சட்டை, போர்வை, தரமான இலவம் பஞ்சு மெத்தை, மெத்தை விரிப்புகள், தலையணை, தலையணை உறை, குளியல் மற்றும் சலவை சோப்பு வகைகள், தேன் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அரசு ஊழியர்களுக்கு கதர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 10 மாத சுலப தவணையில் கடன் வழங்கப்படுகிறது.எனவே, இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்திற்கு கதர் ஆடையை அணிந்து மகிழ்ச்சியுடன் தீபாவளி மற்றும் விழாக்காலங்களை கொண்டாடி மகிழுங்கள்.கடந்தாண்டு மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடு 136.85 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, குறியீடு முழுமையை எட்டியது.இந்த ஆண்டிற்கு, 150 லட்சம் ரூபாய் விற்பனை குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேலும், இச்சிறப்பு விற்பனைக்கு 30 சதவீதம் கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் வாரத்தில் ஒரு நாள் கதர் ஆடையை அணிந்து வர வேண்டும்.இவ்வாறு கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசினார்.நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் மணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், கள்ளக்குறிச்சி கதர் அங்காடி மேலாளர் கலியமூர்த்தி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X