மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே கடமை மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன்  'பளீச்'
Added : அக் 03, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருவதாக கடலுார் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் கூறினார்.

அவர் கூறியதாவது:கடலுார் மாநகராட்சி முழுதும் மேயர் சுந்தரியுடன் தினமும் சென்றுமக்கள் குறைகளை கேட்டு வருகிறேன். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே கடமை. ஆலை காலனி, குழந்தை காலனி மணவெளி பாலன் காலனி, சலங்கை நகர், மது மீனாட்சி நகர், சிவானந்தபுரம் வள்ளிநகர் ஆகிய பகுதிகளில் அனைத்து இடங்களிலும் சிமெண்ட் சாலை மற்றும் தார் சாலை போட ப்பட்டுள்ளது.ஆலை காலனி சமுதாயக் கூடத்தை 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சலங்கை கார தெருவில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறிய கல்வெர்ட் அமைக்கப்பட்டுள்ளது. முதுநகர், கமர் தியேட்டர் ரயில்வே பாலம் முதல் மணவெளி வரை தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.சிவானந்தபுரத்தில் 3 தெருக்களில் 20 லட்சம் ரூபாய் மதிப்பி்ல் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.பாலன் காலனியில் எம்.எல்.ஏ., நிதியில் இருந்தும், குழந்தை காலனியில் எம்.பி.,நிதியில் இருந்தும் சமுதாயக் கூடம் கட்டுவதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.மாநகராட்சியில் எந்த பகுதியில் தெருமின்விளக்கு எரியவில்லை என்றாலும், குப்பைகளை அகற்ற வேண்டும் என்றாலும் உடனடியாக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறேன். மாநகராட்சி பணிகள் மட்டுமின்றிமாணவர்களுக்கு பள்ளி, கல்லுாரிகளில் இடம் பெற்றுக் கொடுத்து படிக்க வழிவகை செய்துள்ளேன்.கடலுாரில் புதிதாக அரசுக் கல்லுாரி அமைக்க வேண்டும். கடலுார் சில்வர் பீச்சை சுற்றுலாத்தளமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சட்டசபை பொதுக்கணக்குழுவினரிடம் மனு அளி்த்துள்ளேன்.கடலூர் மாநகராட்சி மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X