ஊட்டி மலை ரயிலில் நெரிசல்; டிக்கெட் கிடைக்காத பயணியர் | நீலகிரி செய்திகள் | Dinamalar
ஊட்டி மலை ரயிலில் நெரிசல்; டிக்கெட் கிடைக்காத பயணியர்
Added : அக் 03, 2022 | |
Advertisement
 
Latest district News

ஊட்டியில் சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பால் நேற்று மலை ரயிலில் பலர், டிக்கெட் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இரண்டாவது சீசனையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இங்கு வரும் பயணியர் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.நேற்று ஊட்டி ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகளவில் காணப்பட்டது. பல பயணியர் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி சென்றனர்.

நீராவி ரத அறக்கட்டளை தலைவர் நடராஜன் கூறுகையில்,''மாதம் இறுதிவரை சுற்றுலா பயணியர் வருகை அதிகரிக்கும் என்பதால், சிறப்பு ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X