கோபி: 'கவுந்தப்பாடி அருகேயுள்ள காந்தி கோவிலுக்கு, அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே செந்தாம்பாளையத்தில் காந்தி கோவில் உள்ளது. காந்தி ஜெயந்தி தினமான நேற்று இங்கு விழா நடந்தது. அதில் தமிழ்நாடு காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் பங்கேற்றார்.பின், அவர் கூறியதாவது:காந்தியும், அன்னை கஸ்துாரி பாயும், தெய்வத்துக்கு சமமானவர்கள். காந்தி நடந்த இடம் எல்லாம் புனித தலம். அவர் அமர்ந்த இடம் கோவில்.அன்னை கஸ்துாரிபாய் குறித்து காந்தி கூறுகையில், 'உலகத்திலேயே சக்தி வாய்ந்தது அகிம்சை தான்.
அதை எனக்கு போதித்ததே, கஸ்துாரி பாய் தான்' என்றார்.உலகிலேயே எந்த தலைவனுக்கும் கிடைக்காத சிறப்பு காந்திக்கு கிடைத்துள்ளது. உலகில், 84 நாடுகளில் காந்திக்கு சிலை இருக்கிறது. உலகம் வணங்கும் தலைவனாக, கடவுளாக காந்தி உள்ளார்.செந்தாம்பாளையத்தில் உள்ள இந்த காந்தி கோவிலுக்கு, அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும். சுற்றுலா பயணியர் வந்து செல்லும் வகையில், கோவில் அமைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் காந்தி கோவில் நிர்வாகி தங்கராஜ், அகில இந்திய காந்திய இயக்க செயலர் கருப்பையா ஆகியோர் பங்கேற்றனர்.