சென்னை,:ஜார்கண்ட் மாநிலம் டாடா நகர் - கேரளா மாநிலம் எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில், சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு நேற்று வந்தது.ரயில்வே பாதுகாப்பு படையினர், சந்கேத்தின்படி நான்கு வாலிபர்களை அழைத்து விசாரித்து, அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர்.
அதில், ௮ கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு 1.60 லட்சம் ரூபாய்.இதையடுத்து, அவர்களை கைது செய்து, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், அம்பத்துாரைச் சேர்ந்த வசந்த், 20, ஸ்ரீதர், 24, கிஷோர், 22, மற்றும் திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த கிஷோர், 18, என தெரிந்தது. இவர்களிடம், ரயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.