மதுரை : மதுரையில் அகில பாரதிய கிரஹாஷ் பஞ்சாயத்து அமைப்பின் (ஏ.பி.ஜி.பி.,) ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் முரளிபாஸ்கர், ஞானசேகரன், தங்கவேல் ஆகியோர் மதுரை அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளரிடம் மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்ட கிராமத்தினர் நகருக்கு வர அரசு பஸ்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் தமிழகத்தில் மதுரையில் மட்டுமே குளிர்சாதன வசதி, சொகுசு தாழ்தள பஸ்கள், விரைவு பஸ்கள், சாதாரண கட்டண பஸ்கள் என இயங்குகின்றன. இதில் கிராமத்தினர் அதிகம் பயன்படுத்தும் சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.பல பஸ்களில் இருக்கைகள் கிழிந்தும், கம்பிகள் துருப்பிடித்தும், குப்பை நிறைந்தும் உள்ளன. மழைநீர் ஒழுகுகிறது. சாதாரண கட்டண பஸ்களை அதிகப்படுத்தவும், அவற்றில் சாதாரண கட்டணமும் வசூலிக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.