வேலுார்: தொடர் விடுமுறையால், அதிகளவு ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணியர் கூட்டம் அலைமோதுவதால், ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தன.அதை தடுக்க, வேலுார் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர்கள் நேற்று வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை மாவட்டங்களில், அதிக கட்டணம் வசூலித்த, 43 ஆம்னி பஸ்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.