டேபிள் டென்னிஸ் போட்டிபள்ளி மாணவர்கள் அசத்தல்
Added : அக் 04, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

சென்னை, :டேபிள் டென்னிஸ் ரேங்கிங் போட்டியில், பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று அசத்தினர்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏ.கே.ஜி., டேபிள் டென்னிஸ் சென்டர் மற்றும் சென்னை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் ஆதரவுடன், டேபிள் டென்னிஸ் ரேங்கிங் போட்டிகள், கடந்த 1ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் மாலை நிறைவடைந்தது.நேரு விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில், பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளும், சென்னை மாவட்ட ரேங்கிங் போட்டிகளும் நடத்தப்பட்டன.

இதில், ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நான்கு பிரிவுகளில், மொத்தம் 40 பள்ளிகளைச் சேர்ந்த, 350 மாணவர்கள் பங்கேற்றனர்.அதேபோல், மாவட்ட ரேங்கிங் போட்டியில், 11 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட ஐந்து பிரிவுகளில், இருபாலரிலும் மொத்தம் 370 பேர் பங்கேற்று அசத்தினர்.ஐந்தாம் வகுப்பு பள்ளி மாணவர்களில், நெல்லை குப்புசாமி பள்ளி மாணவர் ஸ்ரீவர்ந்த், அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியின் ஹரிஜெனி ஆகியோர் முதலிடங்களை வென்றனர்.அதேபோல், ஒவ்வொரு வகுப்புகளிலும் முதலிடங்களை பிடித்த மாணவ - மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, 11 வயதில் எஸ்.எஸ்.டி., கிளப் முகுந்தன் மற்றும் ஜவகர் கிளப் ஸ்ரீஷித்; 13 வயதில் எம்.எஸ்.டி., கிளப் விஸ்ருத் ராமகிருஷ்ணன், சி.எச்., ஆர்ச் கிளப் அனன்யா; 15 வயதில் நிஷித் மற்றும் எம்.அனன்யா உள்ளிட்டோர் முதலிடங்களை வென்றனர்.ஒவ்வொரு பிரிவுகளிலும், முதல் இரண்டு இடங்களை வென்ற வீரர் - வீராங்கனையருக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X