ஆவடி :ஆவடி -- அண்ணனுார் ரயில் நிலையங்களுக்கு இடையே, நேற்று முன்தினம் மாலை 6:30 மணியளவில், 60 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் அடிபட்டு இறந்து கிடப்பதாக, ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி ரயில்வே போலீசார் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், மாலை 6:00 மணியளவில், ஆவடி - அண்ணனுார் அருகே, தண்டவாளத்தை கடக்கும் போது, திருவள்ளூரில் இருந்து சென்னை வந்த மின்சார ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது.இதுகுறித்து, ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.