சென்னை:குவைத்திற்கு வீட்டு வேலைக்கு சென்ற சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் தன்னை கழிப்பறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக, கண்ணீர் மல்க 'வீடியோ' வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து ஜேம்ஸ் பால் 'எய்ம்ஸ்' எனும் தனியார் தொண்டு நிறுவனத்தை உதவிக்கு நாடினார். அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கணியாபாபு, இந்திய துாதரக அதிகாரிகளிடம் புவனா குறித்து கூறியுள்ளார்.அதற்கு அந்த அதிகாரிகள் 'புவனா அங்கிருந்து தப்பித்து எங்களின் துாதரகத்திற்கு வந்தால் காப்பாற்றி தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கலாம்' எனக் கூறியுள்ளார்.மனைவியை மீட்டுத்தரக்கோரி ஜேம்ஸ் பால் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.