வணிகம் சார்ந்த் நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் குடிநீர் வரி, கழிவு நீர் மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு , ஜப்தி, சீல் வைப்பு போன்ற நடவடிக்கைகள் , குடிநீர் வாரியம் எடுத்தது. இதற்கு பலன் கிடைத்ததால் இதே போன்று வரி, கட்டணம் செலுத்தாக 8000 அடுக்குமாடி குடியிருப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வாரியம் முடிவு செய்துள்ளது.
சென்னையில்9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள் உள்ளன. 13.96 லட்சம் பேர் கட்டணமு், செலுத்துகின்றனர். ஆண்டுவருவாய் 950 கோடி ரூபாய் என வாரியம் நிர்ணயித்துள்ளது.
குடிநீர் , கழிவு நீர் வரி மற்றும் கட்டணம் 570 கோடி ரூபாயும் இதர உள்ளாட்சி ,தொழிற்ச்சாலை கள் மற்றும் லாரி குடிநீர் வழியா 380 கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இந்த வகையில் 2022-23 முதல் அரயைாண்டில் 480 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளை விட 110 கோடி ரூபாய் அதிகமாக வசூலானது.
குறிப்பாக வரி செலுத்தாத வணிக நிறுவனங்களின் குடிநீர், கழிவுநீர் இணைப்ப துண்டிப்பு, ஜப்தி, சீல் வைப்பு போன்ற அதிரடி நடவடிக்கையால் வருவாய் அதிகரித்தது.
இதில் திரையரங்கம்,மால்கள், நிறுவனங்கள் என 3,000 க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் இடையூறுஇல்லாமல் சுதந்திரமாக நடவடிக்கை எடுத்ததால் இந்தளவு நிதி வசூலானதாக அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.
இந்நிலையில் வணிகம் சார்ந்த நடவடிக்கையை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நிலுவைதத் தொகை வைத்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மீது கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுக்க வாரியம் முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி எல்லையில் நான்கு மாடிகளுக்கு மேல் கொண்ட 56 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில் 8,000 க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் முறையாக வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தவில்லை என தெரிவித்துள்ளது.
வணிகம் சார்ந்த நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கையை போல் இது போன்ற அடுக்குமாடி குடியிருப்புகள் மீதும் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி, சீல் வைப்பு போன்றநடவடிக்கை எடுக்க குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
![]()
|
செக் திரும்பினால் நடவடிக்கை
குடிநீர் வரி மற்றும் கட்டணத்தை வார்டு பணிமனை மையங்களில் நேரடியாகவும், ஆல்லைன் வழியாகவும் செலுத்தலாம். பலர் காசோலையாக பணம் செலுத்துவர், பல ஆண்டுகள் நிலுவை வைத்துள்ள சில நுகர்வோர் இணைப்பு துண்டிப்பு, சீல் வைப்பு நடவடிக்கையை தவிர்க்க மதிப்பில்லாத காசோலை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பொதுவாக அரையாண்டு முடியும் மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் மதிப்பில்லாத காசோலையை வழங்கி வாரியத்தை ஏமாற்றுவோர் அதிகம் முன்பு பணம் இல்லாமல் காசோலை திரும்பினால் அபராதம் மட்டும் வசூலிக்கப்படும். இனிமேல் குடிநீர் ,கழிவு நீர் இணைப்பை துண்டிக்க வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால் மதிப்பில்லாத காசோலை வழங்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியு உள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் ஒவ்வொருருக்கும் தனித்தனியாக வரி செலுத்த வேண்டும். மீட்டர் வைத்து குடிநீர வினியோகத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படும். சென்னையில் 8,000 க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பாக்கிவைத்துள்ளன. நீதிமன்ற உத்தவுபடி வரி செலுத்தாவிட்டால் போலீஸ், வாரிய வருவாய்த்துறை வழியாக இணைப்பு துண்டிப்பு, ஜப்தி, சீல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
இதை தவிர்க்க அடுக்குமாடி சங்க நி்ர்வாகிகளை அழைத்து பேச உள்ளோம். அப்போதும் வரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். குடிநீர் வாரிய அதிகாரிகள்.