கள்ளக்குறிச்சியில் பாதாள சாக்கடைத் திட்டம்... துரிதப்படுத்தப்படுமா?
Added : அக் 05, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக அளவீடு பணிகள் துவக்கப்பட்ட நிலையில் பணிகளைத் துவங்கி, விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தற்போது, கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் செயல்படும் நிலையில், ஏராளமான குடியிருப்புகள், அலுவலகங்கள், ஓட்டல்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.



குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வரும் கழிவு நீரை முறையாக வெளியேற்றும் வகையில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால், மழைக் காலங்களில் சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடும் அவல நிலை ஏற்படுகிறது. குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் தியாகதுருகம் சாலையோரம் உள்ள கால்வாய் வழியாக கோமுகி ஆற்றில் சென்று தேங்குகிறது.இதனால், கோமுகி ஆற்றில் கழிவுநீர் ஆறு போல் ஓடுகிறது. அதேபோல், வ.உ.சி., நகர், ராஜா நகர், எம்.ஜி.ஆர்., நகர், கேசவலு நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சித்தேரியில் சென்று தேங்குகிறது.கோமுகி ஆறு மற்றும் ஏரியில் கழிவு நீர் தேங்கி நிற்பதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மழைக் காலங்களில் கோமுகி அணை நிரம்பும்போது, ஆறு வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.ஒரு சில கிராமங்களில் ஆற்றில் போர்வெல் அமைத்து குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், மழைக் காலங்களில் கோமுகி ஆற்றில் கழிவு நீருடன் கலந்து செல்லும் நீரால் பாதிப்புகள் ஏற்படுகிறது. தடுப்பணைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை பொதுமக்கள் துணி துவைக்கவும், குளிக்கவும் பயன்படுத்துகின்றனர்.

கழிவுநீரால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.இதனால், பொதுமக்கள் கள்ளக்குறிச்சி நகரில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.அதன்பேரில், கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவதற்கான அளவீடு பணிகள் விநாயக நகர் பகுதியிலிருந்து துவங்கியது.பணிகள் துவங்கி 2 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், பாதாள சாக்கடை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் துவங்கப்படவில்லை. விரைவில் பணியை துவங்கி முடித்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X