காய்ச்சல் தடுப்பு பணியில் கூடுதல் பணியாளர்களை நியமிப்பதில் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம்
Added : அக் 05, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள, கூடுதல் பணியாளர்களை நியமிக்காமல், மாநகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில், காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு பணியான கொசுப்புழு மற்றும் கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்ள, தற்போது, 304 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதில், 204 பணியாளர்கள், கொசுப்புழு மற்றும் கொசு ஒழிப்பு பணியிலும், 100 பணியாளர்கள், குடியிருப்புகள், திறந்தவெளியில் தேங்கும் நீரை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால், கூடுதல் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும் என, சமீபத்தில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அதே நேரம், மாநகராட்சி பகுதிகளில், 300 வீடுகளுக்கு ஒரு பணியாளர் வீதம் பணி செய்ய வேண்டியுள்ளது.
இதனால், கூடுதலாக, 241 தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்களை பணியமர்த்திக் கொள்ள வேண்டும் என, சுகாதார ஆய்வாளர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மெத்தனம் காட்டுவதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்களை பணியமர்த்த, மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், 4 மண்டலங்களுக்கு தலா, 25 பணியாளர்கள் என்ற கணக்கில், 100 பேர் மட்டுமே பணியமர்த்துவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X