வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் அக்.12ல் தேரோட்டம் நடக்கிறது.இக்கோயிலில் புரட்டாசி திருவிழா இன்று மாலை 6:00 மணிக்கு மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்தலுவுடன் விழா துவங்குகிறது. இன்று அக்.12 வரை நடக்கும் விழாவில் இசை, பட்டிமன்றம், ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. அக்.12ல் தேரோட்டமும், மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. ஏற்பாடுகளை முத்தாலம்மன் பக்த சபையினர் செய்துள்ளனர்.