போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
Added : அக் 05, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கரூர்: கரூரில் முக்கிய சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கரூர் மாநகராட்சியின் முக்கிய சாலையான கோவை சாலை, ஜவஹர் பஜார், காமாட்சியம்மன் கோவில் வீதி, செங்குந்தபுரம் ஆகிய பகுதிகளில் வர்த்தக நிறுவனங்களில் பார்க்கிங் வசதி இல்லை.
இங்கு பைக் உள்ளிட்ட வாகனங்களில் வரும் பொதுமக்கள், தங்களது வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், வாகனங்கள் கடந்து செல்ல போதிய வழியின்றி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கோவை சாலை, ஜவஹர் பஜார் சாலையில் வணிக நிறுவனங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் அதிகமாக உள்ளன. குறிப்பாக, பஸ் ஸ்டாண்ட் அருகே, மனோகரா ரவுண்டானா பகுதியில், ஜவுளிக் கடைகள், பேக்கரிகள் உள்ளன.

இதனால், இங்கு எப்போதும் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும். கடைகளுக்கு பொருட்கள் வாங்க, வாகனங்களில் வருபவர்கள், பார்க்கிங் வசதி இல்லாததால், சாலையோரத்திலேயே வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து, ஜவஹர் பஜார் செல்லும் வலதுபுறம் சாலையில், ஒரு பக்கம் இருசக்கர வாகனங்களும், மறுபக்கம் கார் முதலான வாகனங்களும் வரிசையாக நிற்கின்றன. இதேபோல், ரவுண்டானாவில் இருந்து, கோவை செல்லும் சாலையிலும், வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
ஏற்கனவே, சென்டர் மீடியன் பிரிக்கப்பட்டதால், சாலை அகலம் குறைவாக உள்ளது. அதிலும் பார்க்கிங் வாகனங்கள் அடைத்துக் கொண்டு விடுவதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் திண்டாட்டமாகி விடுகிறது. எனவே, இதற்கு தீர்வுகாண மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X