இதனால், இங்கு எப்போதும் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும். கடைகளுக்கு பொருட்கள் வாங்க, வாகனங்களில் வருபவர்கள், பார்க்கிங் வசதி இல்லாததால், சாலையோரத்திலேயே வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானாவில் இருந்து, ஜவஹர் பஜார் செல்லும் வலதுபுறம் சாலையில், ஒரு பக்கம் இருசக்கர வாகனங்களும், மறுபக்கம் கார் முதலான வாகனங்களும் வரிசையாக நிற்கின்றன. இதேபோல், ரவுண்டானாவில் இருந்து, கோவை செல்லும் சாலையிலும், வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
ஏற்கனவே, சென்டர் மீடியன் பிரிக்கப்பட்டதால், சாலை அகலம் குறைவாக உள்ளது. அதிலும் பார்க்கிங் வாகனங்கள் அடைத்துக் கொண்டு விடுவதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் திண்டாட்டமாகி விடுகிறது. எனவே, இதற்கு தீர்வுகாண மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.