அரவக்குறிச்சி சுற்றுப் பகுதியில் கூடுதல் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்படுமா?
Added : அக் 05, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கரூர்: அரவக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க, இப்பகுதியில் கூடுதல் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் சரகத்தில் 20 பஞ்சாயத்துகள், இரண்டு டவுன் பஞ்சாயத்துகளில் 283 குக்கிராமங்கள் உள்ளன.
இப்பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அரவக்குறிச்சி கிழக்கில் சோழதாசன்பட்டி, மேற்கில் சாந்தப்பட்டி, தெற்கில் கணவாய், வடக்கில் மணல்மேடு ஆகிய பகுதிகள் எல்லைகளாக உள்ளன.
அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உள்பட, 27க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது குறைந்த அளவிலேயே போலீசார் பணியில் உள்ளனர். இரவு ரோந்து பணி, வி.ஐ.பி.,க்கள் பாதுகாப்பு, நீதிமன்ற பணி, சம்மன் வழங்கும் பணி, கடிதம் வழங்கும் பணிகளுக்காக சில போலீசார் சென்று விடுகின்றனர். இதனால், ஸ்டேஷனில் இதர பணிகள் பாதிக்கின்றன.

மேலும், சுற்றுப்பகுதியில் உள்ள 283 குக்கிராமங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை போலீசாரால் கவனிக்க முடியவில்லை. அரவக்குறிச்சியில் இருந்து, குறைந்தது, 25 கி.மீ., துாரம் வரை சென்று கிராமங்களில் புகாரை விசாரிக்க வேண்டி உள்ளது. இதனால் சில சமயங்களில், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் தடுமாறுகின்றனர்.
மேலும், புகார் கொடுக்க வரும் மக்களும் வெகு தொலைவிலிருந்து, அரவக்குறிச்சிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. எனவே, அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனை இரண்டாக பிரித்து, தகுந்த இடத்தில் புதிய போலீஸ் ஸ்டேஷன் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X