தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு பொங்கிய ரசாயன நுரையால் கடும் துர்நாற்றம்
Added : அக் 05, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து நேற்று தென்பெண்ணை ஆற்றில், 1,060 கன அடி நீர் திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிகளவு ரசாயன நுரை பொங்கி ஆற்றில் தேங்கியதால் கடும் துர்நாற்றம் வீசியது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 965 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று காலை நீர்வரத்து, 1,091 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.34 அடிக்கு நீர் இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 1,060 கன அடியும், வலது, இடது வாய்க்காலில் பாசனத்திற்கு, 88 கன அடியும் என மொத்தம், 1,148 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில், 1,000 கன அடிக்கு மேல் நீர் சென்றதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால், வருவாய்த்துறை மூலம், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்யும் போதெல்லாம், கர்நாடகா மாநிலத்தின் தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவு நீர், சுத்திகரிக்கப்படாமல் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.இந்த தண்ணீர் நேரடியாக கெலவரப்பள்ளி அணையில் தேக்கப்பட்டு, உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படும் போது, ரசாயன நுரை ஏற்படுகிறது. மழை காரணமாக நேற்று கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், ஆற்றில் திறக்கப்பட்ட நீரில் ரசாயன நுரை பொங்கி பெருக்கெடுத்தது. அதனால், தண்ணீர் கடும் துர்நாற்றம் வீசியது. அதுமட்டுமின்றி, வலது, இடது வாய்க்காலிலும் ரசாயன நுரை தேங்கியது. தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்படும் நீர், ரசாயன நுரையுடன் வெளியேறுவது தொடர் கதையாகி விட்டதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X