அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேசிய பேரிடர் மீட்பு படை குழு ஆய்வு
Added : அக் 05, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


நாமக்கல்:
மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில், தேசிய பேரிடர் மீட்பு படையின் மூலம், மழை காலங்களில் வெள்ள அபாயம் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி, வரும், 13 வரை நடக்கிறது.

அதற்காக, தேசிய பேரிடர் மீட்பு படையினர், நாமக்கல் மாவட்டத்தில் வருகை
தந்துள்ளனர். அவர்கள், நேற்று நாமக்கல் அரசு மருத்துவ
கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, நிலநடுக்கம், வெள்ளம், தீ விபத்து போன்ற பேரிடர் ஏற்படும் போது, பாதிக்கப்பட்டவர்களை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு, போதிய ஆட்கள் இருக்கின்றனா, வாகனங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும், பாதுகாப்பு சாதனங்கள் தயார் நிலையில் இருக்கிறதா, பாதிக்கப்பட்ட பொதுமக்களை அழைத்து வரும்போது, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், போதிய மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளதா, டாக்டர்கள், பணியாளர்கள் போதுமான அளவுக்கு இருகின்றனரா என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.
ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக, திரவ நிலையில் உற்பத்தி செய்து, வாயுவாக மாற்றி, நோயாளிகளுக்கு வழங்கும் களனை பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர், உதவி நிலைய மருத்துவ அலுவலர் ரகுகுமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X