உழவர்களின் மேம்பாடு சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை
Added : அக் 05, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

காரைக்குடி: கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஓர் இணைப்பு கல்லூரியாக சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா விசாலயன் கோட்டையில் கல்லூரி இயங்கி வருகிறது.இக்கல்லுாரி நிர்வாகத்தினர் கூறியதாவது: சேது வள்ளியம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருகிறது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த உழவர்களின் மேம்பாடு, மக்களின் வளர்ச்சி சமுதாய முன்னேற்றம் போன்ற தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்தில் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தாளாளர் டாக்டர் சேது குமரன் இக்கல்லூரி வளர்ச்சிக்கு பங்காற்றி வருகிறார்.

242 ஏக்கர் கொண்ட கல்லூரி வளாகத்தில் 170 ஏக்கர் விவசாய பண்ணையில் 35 ஏக்கரில் சம்பா பருவத்தில் நெல் பயிரிடப்படுகிறது. மேலும் மா கொய்யா எலுமிச்சை மாதுளை பப்பாளி போன்ற மரங்கள் உள்ளன.மாணவர்களின் களப்பயிற்சிக்கு மேற்கண்ட பயிர்கள் மற்றும் மரங்கள் பெரிதும் உதவுகின்றன. 40 ஏக்கர் பரப்பில் இயற்கை விவசாயம் மூலம் காய்கறிகள் நெல் சிறு தானியங்கள் மூலிகை பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன.

உழவர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி வழங்கப்படுகின்றன.நடப்பு வருடத்தில் 5 மாணவர்கள் கென்யா நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு மேலாண்மை களப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.சிவகங்கை ஸ்பைசஸ் பூங்காவில்மஞ்சள் மிளகாய் மிளகு மற்றும் பல நறுமண பயிர்களின் பொருட்களில் இருந்து மதிப்பு கூடுதல் செய்ய நிறுவனம் அமைக்கப்பட்டு வருகிறது.

இக்கல்லூரியில் பணி புரியும் மகளிர் கூட்டுறவு பால் பண்ணை அமைத்து ஆவின் மூலமாக பால் வினியோகம் நடந்து வருகிறது. கல்லூரியில் 30 ஏக்கரில் பொன்னி நெல் நடவு செய்யப்பட்டு அதில் கிடைக்கும் அரிசி முழுவதும் மாணவர்களின் விடுதியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு இருக்கிறது.தொடர்புக்கு: 98400 46587


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X