சுங்க சாவடிகளில் தற்போதைய நிலை தொடரட்டும் ஐகோர்ட் உத்தரவு | சென்னை செய்திகள் | Dinamalar
சுங்க சாவடிகளில் தற்போதைய நிலை தொடரட்டும் ஐகோர்ட் உத்தரவு
Added : அக் 05, 2022 | |
Advertisement
 

சென்னை: சுங்க சாவடிகளில், 'பாஸ்ட் டேக்' முறை மற்றும் கண்காணிப்பு கேமரா தொடர்ந்து இயங்குவது, பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக, தற்போதைய நிலை தொடர, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி டோல்வே நிறுவனம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:பெரம்பலுார் மாவட்டம், திருமாந்துறை; கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குறிச்சியில் உள்ள சுங்கச் சாவடிகளை கவனிக்கும் பொறுப்பை, எஸ்.கே.எம்., கான்ட்ராக்டர்ஸ் நிறுவனத்திடம் விட்டுள்ளோம். சுங்கச்சாவடிகளில் 2021 பிப்ரவரி முதல், 'பாஸ்ட் டேக்' முறை அமலில் உள்ளது.தொழிற்சங்கங்களின் குறுக்கீட்டால், செங்குறிச்சி, திருமாந்துறை சுங்க சாவடிகள் இயங்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்த சாவடிகளில் கூடுதல் ஊழியர்கள் பணியாற்றுவதால், ஆள் குறைப்பு நடவடிக்கைகளில், எஸ்.கே.எம்., நிறுவனம் இறங்கியது.இதையடுத்து, இம்மாதம் 1ம் தேதி, ஊழியர்கள் சிலர், அலுவலகத்தில் இருந்த பணத்தை திருடினர்; மற்ற பொருட்களை சேதப்படுத்தினர். பாஸ்ட் டேக் இயக்கத்தை துண்டித்தனர்.போலீசில் புகார் அளித்தும், சுங்கச்சாவடி ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடி தொழிலாளர் முன்னேற்ற சங்கங்களை சேர்ந்தவர்கள், சுங்கச் சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து, சட்டவிரோத செயல்படுகளில் ஈடுபட்டனர்.

இரண்டு சாவடிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் கோரப்பட்டது.எனவே, இரண்டு சுங்க சாவடிகளிலும் பாஸ்ட் டேக் இயங்குவதற்கும், கேமராக்கள் இயங்குவதற்கும், மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். சுங்க சாவடிகள் அமைந்துள்ள இடத்தில், 800 மீட்டர் சுற்றளவில் போராட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும்.சுங்க சாவடிகள் சுமுகமாக இயங்குவதை உறுதி செய்ய, பெரம்பலுார் மற்றும் கள்ளக்குறிச்சி கலெக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை, அவசர வழக்காக, நீதிபதி சரவணன் நேற்று விசாரித்தார்.

காணொலி வாயிலாக இந்த விசாரணை நடந்தது. அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் செல்வேந்திரன் ஆஜராகி, தற்போது சுங்க சாவடிகள் இயங்குவதாகவும், போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.இதையடுத்து, சுங்க சாவடிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது; பாஸ்ட் டேக் முறை, கேமரா இயங்குவது பொறுத்தவரை, தற்போதைய நிலை தொடரும்படி உத்தரவிட்ட நீதிபதி, போக்குவரத்துக்கு இடையூறு இன்றி, அமைதியான முறையில் ஊழியர்கள் போராட்டத்தை நடத்தலாம் எனவும் தெரிவித்தார்.விசாரணையை, வரும் 10ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X