அருவங்காடு வெடிமருந்து ஆலையில் துர்கா பூஜை | நீலகிரி செய்திகள் | Dinamalar
அருவங்காடு வெடிமருந்து ஆலையில் துர்கா பூஜை
Added : அக் 05, 2022 | |
Advertisement
 
Latest district News

குன்னுார்:அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் பெங்காளி இன மக்களின் துர்கா பூஜை மற்றும் செந்துார் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ஆண்டுதோறும், 'நீலகிரி சர்போஜனின் துர்கா சப் அமைப்பு' சார்பில், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.இங்கு, 61-வது ஆண்டு நவராத்திரி துர்கா பூஜை விழா கடந்த 1ல் துவங்கியது. தொழிற்சாலை உதவிப் பொது மேலாளர் மல்லிக், விழாவை துவக்கி வைத்தார்.
தினமும் இன்னிசை நிகழ்ச்சி, பஜனை, பரதநாட்டியம், மேஜிக் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.அம்மனுக்கு செந்துார திலகமிட்டு, சுமங்கலி பூஜை நடத்தி வழிபட்டனர். மாலையில், இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று, காட்டேரி நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட்டன.

அமைப்பின் செயலர் அஜித்குமார் டரப்தார் கூறுகையில், ''நீலகிரியில் பெங்காளி கலாசார நிகழ்ச்சிகளுடன், 61வது ஆண்டாக துர்கா பூஜை நடத்தப்பட்டது. மண், ஓலைகள் உட்பட இயற்கை சார்ந்த பொருட்களை கொண்டு சிலைகள் வடிவமைக்கப்பட்டு 'ஆர்கானிக்' வண்ணங்கள் தீட்டப்பட்டன,'' என்றார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X