கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து சரிவு | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து சரிவு
Added : அக் 05, 2022 | |
Advertisement
 

ஓசூர்:ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 931 கன அடியாக குறைந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 1,091 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 931 கன அடியாக குறைந்தது.
அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 900 கன அடி, வலது, இடது வாய்க்காலில், 88 கன அடி என மொத்தம், 988 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.18 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணையிலிருந்து வெளியேறிய நீரில் ரசாயனம் கலந்திருந்ததால், தென்பெண்ணை ஆற்றில் நேற்றும் ரசாயன நுரை தேங்கி துர்நாற்றம் வீசியது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X