ஓசூர்:ஓசூரில், 5,000 சிறு பேப்பர் துண்டுகள் மூலம், வள்ளலார் உருவத்தை தனியார் நிறுவன ஊழியர் வடிவமைத்து அசத்திஉள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சின்ன எலசகிரி காமராஜ் நகரை சேர்ந்தவர் லுாகாஸ், 33. பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஐஸ் குச்சிகளில், தன் மனைவியுடன் சேர்ந்து, 1,330 குறள்களை எழுதி, திருக்குறள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நேற்று வள்ளலாரின், 200வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவத்தை வரைய லுாகாஸ் முடிவு செய்தார். அதன்படி, 5,000 சிறு பேப்பர் துண்டுகளை பயன்படுத்தி, வள்ளலாரின் உருவத்தை தத்ரூபமாக வடிவமைத்து உள்ளார்.மொசைக் ஆர்ட்டில் ஒரு மாத கடின உழைப்பின் மூலம், 4 அடி உயரம், 2.5 அடி அகலத்தில் இதை செய்துள்ளார். இதை பலரும் பார்த்து பாராட்டுகின்றனர்.