பல்லடம்:சொகுசு வாழ்க்கைக்காக பிறர் சொத்து பத்திரங்களை அடகு வைத்து கோடிக்கணக்கில் சுருட்டிய, அழகு நிலைய பெண் உரிமையாளர் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் பிரவீணா, 38; அழகு நிலைய உரிமையாளர்.சமீபத்தில், சமூக வலைதளம் ஒன்றில், பிரவீணா அழுதபடியே பேசிய 'வீடியோ' ஒன்றில், 'பல்லடம் வேலப்பகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சிவகுமார், 42, என்னை துன்புறுத்துகிறார். 'தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்' எனக் கதறினார்.
மோசடியில் இருந்து தப்பிக்கவே, பிரவீணாஇந்த வீடியோவை வெளியிட்டார் என்பதை உறுதி செய்த பல்லடம் போலீசார், ஈரோடில் பதுங்கிஇருந்த பிரவீணா மற்றும் அவர் குறிப்பிட்ட சிவகுமாரையும் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:பிரவீணாவும், சிவகுமாரும் சேர்ந்து, தொழில் துவங்க நினைப்போருக்கு வலைவீசுவர். கடன் வாங்கி தருவதாக கூறி அவர்களது சொத்து பத்திரங்களை அடமானம் வைத்து, பணத்தை சுருட்டி கம்பி நீட்டி விடுவர்.சொகுசு வாழ்க்கைக்காக பலரிடமும் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மற்றும் திருப்பூரில் பலரிடம் இவ்வாறு பல கோடி மோசடி செய்துள்ளனர். இவர்களின் மோசடிக்கு துணை போன தமிழரசனை தேடி வருகிறோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.