காணாமல் போன வரத்து கால்வாய்கள்;  கண்மாய் மீட்கப்படுமா என கிராமத்தினர் எதிர்பார்ப்பு
Added : அக் 06, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

விருதுநகர்- கிராவல் அள்ளப்பட்டதால் ஏற்பட்ட மேடு பள்ளங்கள், புதர்மண்டிய மடைகள், குவாரிகளுக்காக அடைக்கப்பட்ட நீர்வரத்து கால்வாய்கள் என சுரண்டப்பட்ட பாவாலி கண்மாயை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென என கிராமத்தினர், நீர்வள ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.



விருதுநகர் ஒன்றியம் பாவாலி ஊராட்சியில் பாவாலி கண்மாய் உள்ளது. ஒரு காலத்தில் பாவாலி ஊராட்சி நன்கு செழிப்பாக இருந்தது. நெல், வெள்ளரி, கத்தரி, வெண்டை என சாகுபடி இருந்தது. நிலத்தில் எப்போதும் நீரோட்ட இருப்பு இருந்தது. ஆனால் தற்போது வறண்ட பூமியாக பாவாலி காட்சி அளிக்கிறது. இதற்கு காரணம் கண்மாய் நீர்வரத்தின்றி காணப்படுவது தான். பல இடங்களில் வரத்து கால்வாய்கள் மூடி விட்டன. சில இடங்களில் கருவேல ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் பெய்யும் மழைநீரானது திசைமாறி எங்கேங்கோ செல்கிறது. இக்கண்மாயில் இருந்து வெளியேறும் நீரும், வடமலைக்குறிச்சியில் இருந்து வெளியேறும் நீரும் தான் கவுசிகா நதியின் முக்கிய நீர்வரத்தாக இருந்து வந்தது. இதில் பாவாலி தற்போது முற்றிலும் வறண்டு விட்டது கவுசிகா நதியின் வறட்சிக்கு முக்கிய காரணம். கவுசிகா நதி வறண்டதால் குல்லுார்சந்தை நீர்தேக்கம் அதை தொடர்ந்து கோல்வார்பட்டி அணை, இருக்கன்குடி அணை என வறண்டே காணப்படுகிறது.துவக்கம் சரியாக இல்லாததால் அனைத்து நீர்வழித்தடங்களுமே பாழாகி விட்டன.

இந்த சங்கலித்தொடர் வழித்தடத்தை அரசு மீட்டெடுக்காவிட்டால் முதலில் கண்மாய், அடுத்து நதி, அதை தொடர்ந்து அணை என எல்லா நீர்நிலைகளும் பாழாகி விடும். மக்களும் போதிய விழிப்புணர்வு இல்லாது போனதால் நீரோடைகள் கழிவுநீர் ஓடையாகி மாறி விட்டன. தற்போது கவுசிகா நதியில் கழிவுநீர் தான் ஓடுகிறது. 2011 வரை பாவாலி கண்மாயில் நீர்வரத்து எப்போதும் இருந்து கொண்டே தான் இருந்தது. நான்கு வழிச்சாலை பணிகளின் போது பாவாலி கண்மாயில் இருந்து கிராவல் அள்ளப்பட்டதால் ஆங்காங்கே மேடு பள்ளங்கள் ஏற்பட்டன. அப்போது கண்மாயில் வற்ற துவங்கிய நீர் அதை தொடர்ந்து சில ஆண்டுகளாக மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சியால் நீர்வரத்து கால்வாய்கள் புதர்மண்டியதும் தான் பாவாலி கண்மாயை எப்போதும் வறட்சியாக இருக்க செய்து விட்டது.

சில கால்வாய்கள் பராமரிப்பின்றி போனதால் மூடிவிட்டது. 10 ஆண்டுகளாக பாவாலி கண்மாய்க்கு நீர் வருவதில்லை. நீர் வராததாலும், கிராவல் அள்ளியதால் கண்மாய் நிலம் மேடு, பள்ளமாகி விட்டதால் கருவேல மரங்கள் அதிகளவில் வளர துவங்கி விட்டன. மேலும் கரையும் பலமில்லாது போய்விட்டது. இதனால் தற்போது பாவாலி கண்மாய் முழுவதும் இந்த கருவேல ஆக்கிரமிப்பில் உள்ளது.2019ல் நடந்த குடிமராமத்து பணியின் போது இக்கண்மாயையும் சேர்த்திருந்தால் இந்தாண்டு பெய்த மழையில் நீர்வரத்து ஏற்பட்டிருக்கும். ஆகவே வரும் திட்டங்களில் இக்கண்மாயை சேர்த்து மேடு, பள்ளங்களை சமன்படுத்தி, நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்து மீண்டும் நீராதாரமிக்க கண்மாயாக பாவாலி கண்மாய் மாற மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.




குவாரிக்காக அடைக்கப்பட்ட நீர்வரத்து பாதைகள் இரண்டு மடை உள்ள கண்மாயில் மேற்கு மடை கண்மாய் முற்றிலும் சேதமடைந்துள்ளது. நீர்வரத்து பாதைகள் எல்லாம் கல்குவாரி வண்டிப்பாதைகள் ஆக மாறி விட்டன. இதனால் நீர்வரத்துக்கு வாய்ப்பே இல்லை. சீனியாபுரம் கண்மாயில் இருந்து வரும் வரத்து இணைப்பு கால்வாயை சீரமைத்தால் உதவியாக இருக்கும். எங்கள் ஊரின் கண்மாய் நிறைந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.ஆதவன் வடிவேல், விவசாயி




கண்மாயை மீட்க வேண்டும் கிராவலை அள்ளியதுதான் கண்மாயின் வறட்சிக்கு துவக்க புள்ளியாக அமைந்து விட்டது. சிறுவயதில் 2 போக நெல் விளைச்சலை பார்த்துள்ளேன். தற்போது வறட்சியால் நெல் விதைக்க கூட வழியில்லாத சூழல் உள்ளது. நாங்களும் சிறு சிறு விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம். பல விவசாயிகள் கூலி தொழிலாளிகளாக மாறிவிட்டனர். கண்மாயை மீட்டு பாவாலிக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். 10 ஆண்டுகளாக வரத்து கால்வாய்கள் அடைக்கப்பட்டுள்ளன. மாற்று வழியாக வடமலைக்குறிச்சி கண்மாயில் இணைப்பு செய்தால் அதிகளவில் நீர்வரத்து ஏற்படும்.ரவி, விவசாயி.




கருவேல காடாகும் நிலை 2021ல் மழை பெய்த போது கண்மாயில் சிறிது நீர் சேகரமானது. அதுவும் நேரடியாக பெய்த மழைநீர் தான். வரத்து கால்வாய்கள் வழியாக நீர் வரவில்லை. கால்வாய்களை சீரமைத்தாலே நீர்வரத்து சீராகி விடும். கருவேல மரங்களை அகற்றுவது காலத்தின் கட்டாய தேவையாகி உள்ளது. இப்படியே விட்டால் கண்மாய் கருவேல காடாகிவிடும். மாவட்ட நிர்வாகம் விவசாயத்தை காக்க கண்மாயை மீட்க வேண்டும்.ஜெயராஜ், பாரத பசுமை மன்றம், பாவாலி.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X