நகரில் பன்றிகள் தொல்லை; பொதுமக்கள் பாதிப்பு
Added : அக் 06, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



கோவில் முன் குப்பை




உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் முன், குப்பை, மண் கொட்டாதீர் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சிலர் அதையும் மீறி குப்பை கொட்டுகின்றனர். இதை கொட்டுவோர் மீது கோவில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பொதுமக்கள், உடுமலை.



பன்றிகள் தொல்லை



உடுமலை நகராட்சி பாலாஜி நகரில், பன்றிகள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால், சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இவற்றை அப்புறப்படுத்த நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- சரவணன், உடுமலை.



விரிவுபடுத்த வேண்டும்



உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில், கொல்லம்பட்டறை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல முடிவதில்லை. எனவே, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி, பாலத்தை விரிவுபடுத்த வேண்டும்.- கார்த்திக், உடுமலை.



பிரதிபலிப்பான் அமைக்கணும்



தேசிய நெடுஞ்சாலையில், அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இதில், தெருவிளக்குகள், பிரதிபலிப்பான்கள் இல்லை. இதனால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள், பொதுமக்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இங்கு, பிரதிபலிப்பான், தெருவிளக்கு அமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சந்தோஷ், உடுமலை.



ஆக்கிரமிப்புகளால் நெரிசல்



உடுமலை உழவர் சந்தை ரோட்டில், காலை நேரங்களில் தற்காலிக கடைகள் அமைக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் நடக்க முடியாமல் சிரமப்பட வேண்டியதுள்ளது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சியினர் அகற்ற வேண்டும்.- ராஜேந்திரன், உடுமலை.



சிக்னல் வேண்டும்



மடத்துக்குளம் நால் ரோடு, பல்வேறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாகவும், தேசிய நெடுஞ்சாலையிலும் அமைந்துள்ளது. இதனால், போக்குவரத்தும் அதிகமாக காணப்படுகிறது. அங்கு சிக்னல் இல்லாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, தானியங்கி சிக்னல் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சிவசங்கரன், உடுமலை.



விரைவுபடுத்தணும்



உடுமலை, பஸ் ஸ்டாண்ட் எதிரில், விரிவாக்கப்பணிகள் மந்தகதியில் நடந்து வருகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.- சுவாமிநாதன், உடுமலை.



ஆக்கிரமிப்புகளை அகற்றணும்



உடுமலை ராஜேந்திரா ரோட்டில், தள்ளுவண்டிகள், கடைகளின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால், பிறவாகனங்கள் செல்ல முடிவதில்லை. நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.- முத்துக்குமார், உடுமலை.



பராமரிப்பு இல்லை



மெட்ராத்தி பனத்தம்பட்டியில் பொது சுகாதார பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. பெண்களும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே இதை பராமரிக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பாண்டியன், உடுமலை.



சிக்னல் வேண்டும்



பொள்ளாச்சி- தாராபுரம் ரோட்டில் ஓட்டமடம் சந்திப்பில்,தானியங்கி சிக்னல் இல்லை. இதனால் வேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க தானியங்கி சிக்னல் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மோகனசுந்தரம், உடுமலை.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X