உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை 'டோல்கேட்' ஊழியர்கள் ஐந்தாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, செங்குறிச்சி டோல்கேட் மற்றும் திருவாமத்துார் டோல்கேட்டுகளில் பணிபுரியும் ஊழியர்கள் தலா 28 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.இதனால் அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கட்சியினர் டோல்கேட் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேச்சு நடத்தினர்.
சுமூக தீர்வு ஏற்படாததால், போராட்டம் தொடர்கிறது.நான்காவது நாளான நேற்று முன்தினம் டோல்கேட் நிர்வாகத்தினர் போலீசாரின் துணையோடு சுங்க கட்டணம் வசூலிக்கும் பகுதியில், 'பாஸ்டேக்' முறையில் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
இருப்பினும் டோல்கேட் ஊழியர்கள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையே விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிக்குமார், டோல்கேட் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து, பேச்சு நடத்தினார். எந்தவித தீர்வும் ஏற்படாததால், ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது.